அருள்வாக்கு இன்று

நவம்பர் 17-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 13:24-32

இன்றைய புனிதர்


ஹங்கேரியின் புனித எலிசபெத்து

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. மாற்கு 13:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, மானிடமகனின் இரண்டாம் வருகையைப் பதிவுச் செய்கிறார். மானிடரின் துயர்துடைக்க மண்ணகம் இறங்கிய இயேசு 30 வருடம் சமுகப்பாய்வுச் செய்தும் 3 ஆண்டுகள் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றப் பல துன்பதுயரங்களை அனுபவித்து அரக்கர்களால் கொலைச் செய்யப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தும் 40 நாட்கள் மானிடருக்கு தான் உயிர்த்துவிட்டதை உணர்த்தி 40நாள் மாட்சிமையோடு தந்தையால் விண்ணகம் ஏறிச் சென்றார். துணையாளரை அனுப்பித் தோய்வுற்றத் திருச்சபையைப் பலபடுத்தி உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடிருக்கிறேன் என்றவர் தம் தூயவரால் உலகை ஆளுகின்றார். இறுதிநாளில் உலக முடிவில் மானிடரை தம் வலப்பக்கம் அமரச் செய்வதற்கான பணியினை ஆற்றிட மாட்சிமையோடும், வல்லமையோடும் விண்ணின்று இறங்கி மானிடரை வெவ்வேறாகப் பிரித்துத் தன் தந்தையின் வலப்பக்கத்தில் அமரச் செய்வார் என்னும் வார்த்தைகள் ஒரு போதும் அழியாது.

சுயஆய்வு

  1. மானிடமகனின் வருகை எத்தகையது?
  2. அவரது வார்த்தை எத்தகைய ஆற்றல் மிக்கது அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது இரண்டாம் வருகையின்போது உமது வலப்பக்கம் அமரும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு