அருள்வாக்கு இன்று

நவம்பர் 16-சனி

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


ஸ்காட்லாந்து புனித மார்க்ரெட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவாரென நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ; என்றார். லூக்கா 18: 8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விரைவில் நீதியினிமித்தம் துன்புறுவோருக்கு நீதி வழங்க வருவாரெனக் குறிப்பிடுகின்றார். ஆனால் மண்ணுலகில் நாம் நீதியோடு வாழ்கின்றோமா? ஏனெனில் அடுத்தவரைத் துன்புறுத்தி அபகரித்து, சுயநலத்திற்காக எதையும் செய்யும் மகான்கள் அனேகர் மலிந்துவிட்டனர். எத்தனையே கணவரை இழந்த அபலைகள் படுகின்ற துன்பங்களை நீர் கண்டு காணாமல் செல்கின்ற நிலை அதினம். மீண்டும் பாதிக்கப்பட்டவர் வற்புறுத்தியம் கண்டும் காணாமல் இருப்பவர் அனேகர். ஆனால் இத்தகையோருக்கு மறுவாழ்வில் நீதி கிடைக்குமா? இறைமகனின் போதனைபடி வாழும் மக்களை அவர் நம்பிக்ககையோடு காணமுடியுமா?

சுயஆய்வு

  1. ஏதுவும் என்னால் கூடும் இயேசு என்னோடு இருக்கும்போது என்பதை உணர்கின்றேனா?
  2. நீதிக்காகக் குரல் கொடுக்கத் துணிகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர்வரும் நாளில் உம்மை நேருக்கு நேர் சந்திப்பேன் என்ற நம்பிக்கையை எனக்குள் பதித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு