அருள்வாக்கு இன்று
நவம்பர் 15-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 17:26-37
இன்றைய புனிதர்
புனித ஆல்பர்ட் கிரேட்
லூக்கா 17:26-37
புனித ஆல்பர்ட் கிரேட்
தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்: தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர். லூக்கா 17:33
இன்றைய நற்செய்தியில் இயேசு உயிரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு? அடுத்தவரை அழித்துத் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்பவர்கள் அனேகர் நம்மிடையே உள்ளனர். அப்படிப் பட்டவர்களையே சாடுகின்றார். அடுத்தவரின் நலவாழ்விற்காக எந்த நேரத்திலும் உதவிடும் மனம் கொள்ள நமக்கு அறிவுறுத்துகிறார். என்றோ ஒரு நாள் சாகும் நமக்கு இவ்வுலகச் சுகம் நிலைப்பதில்லை என்பதை உணர்ந்தவர்களாய் அடுத்தவரின் தேவைகளில் கவனம் செலுத்துவோம். அதற்காக நம்மையே அளிக்கவும் தயாராக இருப்போமா? அப்போது தான் இழக்கும் எவரும் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியும்.
அன்பு இறைவா! பிறர்நலம் போணும் நல் மனதினைத் தாரும். ஆமென்.