அருள்வாக்கு இன்று

நவம்பர் 14-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 17:20-25

இன்றைய புனிதர்


புனித லாரன்ஸ் ஓ டூல்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது ” என்றார். லூக்கா 17:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இறையரசு என்பது எங்கே எப்படி என்பதை அறிவோம். நாம் வாழ்கின்ற உலகில் மக்களினம் எந்தவித ஏற்றத் தாழ்வின்றி ஆண்- பெண் சமம், வறுமையில்லா நிலை. ஜாதி-மத-இன-மொழி வேறுபாடு இல்லாமல் அனைவரும் இறைவனில் ஒன்றே. “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!"என்ற நிலை என்று பூமியில் நிலவுகின்றதோ, அன்றே 'இறையாட்சி "நம்மில் தோன்றிவிட்டது என்பதாகும். அனைவரும் அன்ற ஆதிதிருச்சபையில் இருந்தது போல் ஒரே அன்பின் குடும்பமாய் வாழும்போது இயேசு கண்ட ஆட்சி இப்புவியில் காணும். எனவே நாம் பிறக்கும்போது எதையும் கொண்டுவரவில்லை. அதைப் போல் இறக்கும்போது எதைக் கொண்டு செல்வதில்லை. இதற்காக எத்தனை போரட்டங்கள், குழப்பங்கள், வேறுபாடுகள்... தவிர்ப்போம் அனைத்தையும்! அன்றே எழுப்புவோம் இறையரசை!

சுயஆய்வு

  1. நான் என் அடுத்தவரின் நலனில் பங்கேற்கிறேனா?
  2. நான் கடந்து சென்று வறியோருக்கும் என் உறவைக் காண்பிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இறைவனின் படைப்பில் அனைவரும் ஒன்று என்ற மனநிலைத் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு