அருள்வாக்கு இன்று

நவம்பர் 13-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 17: 11-19

இன்றைய புனிதர்


புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் " என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். லூக்கா 17:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பத்து தொழுநோயாளிகளைக் குணப்புடுத்துகின்றார். இந்தப் பத்து பேரும் தாங்களுக்குப் பிடிக்கப்பட்டிருந்த நோயின் தன்மையை உணர்ந்து பல நாட்களாக அவதியுற்றவர்கள். சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் பலவருடங்கள் என்று எண்ணி வெதும்பிய நிலையில் தான் இறைமகன் இயேசுவின் பணியை அறிகின்றார்கள். அவரை நாம் கண்டால் நிச்சயம் குணம் பெறுவோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இயேசு கலிலேயா,சமாரியா வழியாக வருவதைக் கேள்விபபட்டு அங்கே வந்து அவரது இரக்கத்தைப் பெற்றுக்குணம் பெறுகின்றனர். ஆனால் நன்றிக்கடனை ஒருவன் மட்டுமே செலுத்துகின்றான். ஆனால் இயேசுவோ மற்ற ஒன்பதுபேர் எங்கே என்று கேட்கின்றார். இதன் அர்த்தம் நமக்கும் பொருந்தும். நாமும் நம்பிகிகில் இறைமகனைத் தொழுது மற்றவருக்கும் பிரதிபலன் பாராது உதவி செய்ய அறிவுறுத்துகின்றார்.

சுயஆய்வு

  1. நான் எனக்குச் செய்த உதவிகளை மறக்கின்றேனா?
  2. நம்பிக்கையோடு இறைவனைத் தொழுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! பிறருக்குச் செய்யும் உதவிக்குப் பிரதிபலன் பாராதுச் செய்யும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு