அருள்வாக்கு இன்று

நவம்பர் 12-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


புனித ஜோசபாத்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள்: எங்கள் கடமையைத்தான் செய்தோம் " எனச் சொல்லுங்கள். லூக்கா 17:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் பணிவிடையைப் பற்றி விளக்குகின்றார். எவ்வாறு உழைத்துக் களைத்துச் சோர்ந்து போனவர்களுக்குச் சளைக்காமல் ஆர்வத்தோடு அவர்களுக்கு உணவு அளிக்கச் சொல்கின்றார். இது உடல் சுகத்திற்கு உணவு- ஆனால் இறைவார்த்தைகளின் படி வாழாமல் ஆன்மாவின் உணவைச் சுவைக்காதவர்களுக்கு நாம் மனங்கோணமல் இறைவார்த்தை வழியிலான உயர்ந்த உணவைப் பரிமாற நாம் தயாராக இருக்க வேண்டும். நாமும் அந்த உயரிய வார்த்தை உணவை மற்றவருக்குப் பகிர்ந்தளிக்க அதற்கான முன் தயாரிப்போடு இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

சுயஆய்வு

  1. நான் அடுத்தவருக்காகப் பணிவிடைச் செய்ய முனைகின்றேனா?
  2. சோர்வுற்ற உள்ளங்களுக்கு ஆன்ம உணவைப் புகட்ட நான் தகுதியாக உள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே!நான் உமது மக்களின் துன்பதுயரங்களில் பங்கெடுக்கப் பலம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு