அருள்வாக்கு இன்று

நவம்பர் 11-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 17:1-6

இன்றைய புனிதர்


தூரின் நகர் ஆயர் புனித மார்ட்டின்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ' நான் மனம் மாறிவிட்டேன் " என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். லூக்கா 17:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தொடர்ந்து பாவம் செய்து விட்டு மீண்டும் வந்து நான் மாறிவிட்டேன் என்று சொல்பவரை மன்னிக்க அறிவுறுத்துகிறார். எப்படி எனில் நமக்கு எதிராகச் சதி செய்கிறவர்களையோ- தவறு செய்கிறவர்களையோ அவர்கள் தான் செய்தது தவறு என்று உணர்ந்து கொள்ளும் நிலைவரும்போது அந்த மன்னிப்பபை ஏற்கும் மனபக்குவம் நமக்குள் உருவாக வேண்டும். இதையே இன்றைய சமுதாயத்தில் நாம் பதிக்க வேண்டிய முக்கியப் பணியாகும்.

சுயஆய்வு

  1. நான் அடுத்தவரின் தவறை மன்னிக்கும் நிலையில் உள்ளேனா?
  2. அதே வேளையில் என் தவறை யார் மன்னிப்பார் என்று உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எதிரியானாலும் அவர்கள் குற்றத்தை மன்னிக்கும் மனதை தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு