அருள்வாக்கு இன்று
நவம்பர் 10-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மாற்கு 12:38-44
இன்றைய புனிதர்
புனித லியோ (பெரிய சிங்கராயர்) St. Leo the Great
மாற்கு 12:38-44
புனித லியோ (பெரிய சிங்கராயர்) St. Leo the Great
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே" என்று கூறினார். மாற்கு 12:40
இன்றைய நற்செய்தியில் இயேசு மறைநூல் அறிஞர்களைப் பற்றி எச்சரிக்கை விடுகின்றார். காணம் அவர்கள் தொங்கள் ஆடைகளையும், முன்மை இருக்கைகளையும் விரும்புகிறார்கள். நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுதல் செய்வது போல் நடிக்கின்றார்கள். கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொள்கிறார்கள். ஆனால் கடவுளுக்கு உகந்தவர்களைப் போன்று நடிக்கின்றார்கள். அன்றும் இன்றும் அனேகர் அதே நோக்கில் வாழ்வதை நாம் அன்றாடம் காணும் நிகழ்வாகும். எனவே இத்தகைய மனநிலையோடு நீங்கள் வாழ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றார். ஏனெனில் கடுமையான தண்டனைக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே என்று நமக்குச் சுட்டிக் காட்டி எச்சரிக்கையோடு வாழ்ந்திட நமக்கு அழைப்பு விடுகின்றார்.
அன்பு இயேசுவே! உண்மைப் போதனைகளின் படி வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்