அருள்வாக்கு இன்று

நவம்பர் 9-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 2:13-22

இன்றைய புனிதர்


உரோமை இலாத்தரன் பேராலய அர்ச்சிப்பு Consecration of the Lateran Cathedral

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள். யோவான் 2:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உண்மையான கிறிஸ்துவர்களின் அடையாளம் எது என்பதை உணர்த்துகின்றார். எப்படி எனில் கிறிஸ்துவே நமது திருக்கோயில். இதில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு மேற்கோள் தான் யூதர்;கள் அன்று கேட்டக் கேள்விக்கு இன்று நமக்குப் பாடம். ஆலயத்தின் பெயரைச் சொல்லிப் பலவித வியாபாரம் பொருள் சேமிப்புப் போன்றவற்றைக் கடிந்து கொள்கின்றார். எவரையும் வருத்திப் பொருள் சேர்க்க வேண்டாம் என்றும், நானே உங்களின் பேராலயம். இதை இடித்தால் மூன்றே நாட்களில் திரும்பக் கட்டுவேன். நானே இவ்வுலக மாந்தரின் துன்பதுயர் தீர்க்கும் ஆலயம். நானே உண்மையான அடையாளமாக இருக்கின்றேன் என்கின்றார்.

சுயஆய்வு

  1. நான் இயேசுவின் மறையுடலாக இருக்கின்றேனா?
  2. மற்றவர்களையும் அவரின் உறுப்புகளாகக் கருதுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னுள் நீர் இயங்குகின்றீர் என்பதை உணரும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு