அருள்வாக்கு இன்று

நவம்பர் 7-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா. 16:1-8 லூக்கா 15:1-10

இன்றைய புனிதர்


புனித வில்லிப்ரார்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா 15:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு திருந்தாத 99 ஆடுகளைவிட மனம் மாறிய ஒரு ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்து மனம் மகிழ்கின்றார். காரணம் அனைத்து மாந்தரும் மீட்புப் பெறவே தன்னையே கையளித்தார். ஆனால் இன்று வரை மக்களிடையே இதற்கான கூறுகள் மழுங்கடிக்கப் பட்டிருப்பதை இந்நாள் வரை அவர் காண்கின்ரார். எனவே தான் இறை மதிப்பீடுகளின் படி வாழ்பவரே அவரது உறவினர் என்கின்றார். ஆம் சகோதர் சகோதரிகளே! இறைதிட்டத்தை நாம் வாழ்வாக்க வேண்டுமானல் நாம் முதலில் நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம். நமது எண்ணம் இறைபணிக்காக என்பதை மறவாமல் சமுதாயத்தில் நலிந்திருப்போரை தேடிச் சென்று அவர்களது நலனில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். இதுவே இறைவனின் விருப்பம்.

சுயஆய்வு

  1. நான் முதலில் என்னை இறைதிட்டத்திற்குக் கையளிக்கத் தயாரா?
  2. அதற்கான தெளிவுகளைப் பெறுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மைப் போல் நானும் சமுதாயத்தில் கடை எல்லையிலிருப்போரை முதன்மைபடுத்த எனக்கு ஆற்றலைத் தந்து வழி நடத்தும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு