அருள்வாக்கு இன்று

நவம்பர் 6-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 14:25:33

இன்றைய புனிதர்


லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. லூக்கா 14:33

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடன் இணைந்துப் பணியாற்ற எத்தகையோர் இடம் பெற வேண்டுமென்று திட்டவட்டமாகத் தன் சீடர்களிடம் விளக்குகின்றார். எப்படியெனில் தன் உறவுகளை, உடைமைகளை அதாவது பொன்னாசை, பொருளாசை, இவ்வுலக் மாயைகள் இவற்றையெல்லாம் துறந்து வர வேண்டும். காரணம் சமுதாயத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் ஆகியோரை தன் இணை நன்பர்களாக என்று மாற்றம் செய்து வாழ்கின்றீர்களோ அவர்களே என் சீடர்கள் என்கின்றார் இறைமகன். எனவே நாம் அடுத்தவருக்காக அனைத்தையும் துறந்து இயேசுவின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவோம். இதற்காகவே இறைமகன் இம்மண்ணகம் நோக்கி வந்தார் என்பதை உணர்ந்தவர்களாய் செயல்படுவோம். வாரீர்.

சுயஆய்வு

  1. நான் என்னை அடுத்தவருக்காக இழக்கத் தயாரா?
  2. அடுத்தவர் நலனில் எனது பங்கு என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! சுயநலம் கருதாமல் உம்மைப் போன்று அடுத்தவருக்காய் உழைக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு