அருள்வாக்கு இன்று

நவம்பர் 5-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 4:15-24

இன்றைய புனிதர்


புனித செக்கரியா/எலிசபெத்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லையென உமக்குச் சொல்கிறேன் ; என்றார். லூக்கா 4:15-24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உலகின் அனைத்து மாந்தரும் மீட்புப் பெறும் பொருட்டு இவ்வுலகிற்கு வந்தார். ஆனால் அவரது வருகையை உணராத யூத வர்க்கம் சாக்குப் போக்குச் சொல்லி நேரியப் பாதையை விட்டுக் குறுக்கு வழியில் எதையும் பெற முடியும் என்ற நிலையில் அவரவர் பணியைக் கவனிக்கின்றனர். இறைமகன் அழைப்பு எடுபடாமல் போகின்றது எனவே தான் அழைப்பு அனைவருக்கும் தான் என்பதை அறியாதவர்களை நோக்கி அழைக்கப் பெற்றோர் அனேகர், ஆனால் தேர்வுச் செய்யப்பட்டோர் ஒரு சிலர் என்ற நிலை உள்ளதை உணர்த்துகின்றார். எனவே விழிப்பாய் இருப்போம்.

சுயஆய்வு

  1. நான் என் அழைப்பை உணர்கின்றேனா?
  2. அழைப்பிற்கேற்ப என் மனநிலை உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் உம் அழைப்புக்குச் செவிசாய்க்கும் மகனாக வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு