அருள்வாக்கு இன்று

நவம்பர் 2-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 25:31-46

இன்றைய புனிதர்


தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார். மத்தேயு 25:40

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எந்த ஒரு மானிடனும் பசியிலோ தாகமாகவோ இருந்தால் அவர்களுக்கு உதவி செய்தோமென்றால் அதுவே இறைமகனுக்குச் செய்த உதவியாக ஏற்றுக் கொள்கின்றார். எப்படியெனில் அவரது வருகை இத்தகையோருக்கே. எனவே தான் எல்லோரும் எல்லாம், பெற்று இன்புற்றிருக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இதனை நாம் வாழ்வாக்க இறை வார்த்தையின் படி வாழ நாம் நம்மைத் தயார்படுத்தி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்போது இறையாட்சி மண்ணகம் காணும்.

சுயஆய்வு

  1. அடுத்தவரின் துன்ப வேளையில் என் பங்கு என்ன?
  2. உடன் உழைப்பை அளிக்க முன் வருகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! ஏழையின் சிரிப்பில் உம்மைக் காணும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு