அருள்வாக்கு இன்று

அக்டோபர் 31- வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 13: 31-35

இன்றைய புனிதர்


புனித வொல்ப்காங்க்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா 13:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் நகரைப் பார்த்து இறைப்பணியாளர்களைக் கொன்று குவித்தாயே, அதனால் கைவிடப்படுவாயெனப் புலம்புகின்றார். அந்நகரின் வீதியில் ஆண்டவரின் பெயரால் ஆசி பெற்றவர் வரப் போகின்றார். அதை அனைவரும் அறிக்கையிடுவீர்கள். ஆனால் இந்த நாள் வரும் வரை நீங்கள் இறைமகனைக் காணமாட்டீர்கள். ஏனெனில் அவர் மானிடருக்காகப் பாடுகள் பல அடைந்து மரித்து மூன்றாம் நாள் மீண்டும் மாட்சிமையோடு வரும்போது நீங்கள் காண்பீர்கள். அது நடைபெறும் வரை இறைமகனைக் காணமாட்டீர்கள் என்பதே இதன் மையக்கருப்பொருள்.

சுயஆய்வு

  1. இறை இல்லம் எது என்பதை உணர்க்கின்றேனா?
  2. அந்த இல்லத்தை உருவாக்க எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இவ்வுலகப் பேராசைகளை ஒழித்து நலிந்தோரின் இறை இல்லமாக நான் மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு