அருள்வாக்கு இன்று
அக்டோபர் 30-புதன்
இன்றைய நற்செய்தி
லூக்கா13:22-30
இன்றைய புனிதர்
புனித அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ்,
லூக்கா13:22-30
புனித அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ்,
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். லூக்கா 13:29
இன்றைய நற்செய்தியில் இயேசு இறையரசில் யார் பங்கு கொள்ள முடியும் என்பதைக் கூறுகின்றார். இவ்வுலகமெனும் பரந்த இடத்தில் பல துன்பதுயரங்களை அனுபவித்துப் பல இடறல்களையும் கடந்து அடுத்தவர்க்காகப் போராடுபவர்களும் இதில் அடங்குவர். நாம் எப்பொதும் கோயிலிலும் - குருவோடும்- கன்னியர்களோடும் நட்புறவுடன் இருப்பதால் மட்டும்; இந்த இறையரசில் பங்கேற்க முடியாது. அடுத்தவர் நலன் கருதி உழைத்தவர்களே! இடுக்கமான வாயில் ஆன இயேசுவின் இறையரசில் தகுதி பெற்றவர்கள் ஆவார்.
அன்பு இயேசுவே ! உமது அரசில் நானும் இணைய எனக்குப் போதுமானப் பரந்த உள்ளத்தையும் உழைக்கும் வலிமையையும் தாரும். ஆமென்