அருள்வாக்கு இன்று

அக்டோபர் 29-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 13:18-21

இன்றைய புனிதர்


புனித நார்சிசஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின" என்று கூறினார். லூக்கா 13:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையாட்சியைக் கடுகு விதைக்கு ஒப்பிடுகின்றார். காரணம் கடுகு விதை சிறிதாக இருப்பினும், அது நிலத்தில் ஊன்றப்பட்டு மரம் முளைத்து பல கிளைகள் விட்டு அதில் வந்து தங்கி இளைப்பாறும் பறவைகள் சுகத்தை அனுபவிக்கும்போது சிறு துளி பெருவெள்ளம் போல நாம் செய்யும் தானம் தர்மம் ஆலமரவிழுதுகளைப் போலத் தழைத்து தரணியரை வாழ வைக்கும் என்று நமக்கு உவமைகள் வாயிலாக அறச்செயல்கள் ஆற்றிட அழைப்பு விடுக்கின்றார். எனவே நாமும் கடுகு விதை புளிப்பு மாவு போல் நமக்கு அடுத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட முயல்வோம். இறையரசை கட்டி எழுப்பும் கருவியாகளாவோம்.

சுயஆய்வு

  1. இறையாட்சி என்றால் என்ன? அறிகிறேனா?
  2. கடுகு விதையின் பலன் என்னவென்று அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எனது செயல்கள் அணைத்தும் கடுகு விதை - புளிப்பு மாவு போன்று பலுகிபெருகி அடுத்தவரின் துயர்துடைக்கும் அருமருந்தாகிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு