அருள்வாக்கு இன்று

அக்டோபர் 28-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 6:12-19

இன்றைய புனிதர்


புனித சீமோன், யூதா - திருத்தூதர்கள்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

புனித சீமோன், யூதா - திருத்தூதர்கள் விழா
அருள்மொழி:

"அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்." லூக்கா 6:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரு சீடர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருத்தூதர் என்று பெயரிட்டார். இன்று சீமோன் -யூத ஆகிய திருத்தூதர்கள் விழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். யூதேயா, தீர், சீதோன் மக்களின் பிணிகளை குணமாக்கினார். தீய ஆவிகளும் ஒடின. இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவரின் பிணிகளையும் போக்கினார். எனவே சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் தொடமுயன்றனர். தொட்டவர்கள் குணம் அடைந்தனர். நம்பிக்கை அவர்களை குணப்படுத்தியது. இத்தகைய பிணிகளால் துயறும் மக்களை நாமும் கண்டு இறைமகனின் ஆற்றலோடு குணமளிக்க நமக்கு துணையாளரை அனுப்பியுள்ளார். எனவே தூய ஆவியில் நாமும் இயங்குவோம். இறையரசை கட்டி எழுப்புவோம்.

சுயஆய்வு

  1. இயேசுவின் வல்லமையை நான் பெற எனது முயற்சி யாது?
  2. துணயாளரை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வருகை வறியோருக்கே என்பதை உணர்ந்து வாழும் வரம் தரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு