அருள்வாக்கு இன்று

அக்டோபர் 27-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:46-52

இன்றைய புனிதர்


புனித ப்ரூமென்டியஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார். மாற்கு 10:51

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, எரிக்கோவுக்கப் போகும் வழியில் பார்வையற்ற ஒருவரின் கூக்குரலைக் கேட்டு "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்" என்று கேட்டார். அதற்கு இந்தப் பர்த்தமேயு "ரபூணி , நான் பார்வை பெற வேண்டும்" என்று கூறினார். உடனே இயேசு "நீர் போகலாம். உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். அவர் பார்வை பெற்று இயேசுவைப் பின்தொடர்ந்தார். ஆம் அன்பர்களே! நாம் நம்பிக்கையோடு எதைக் கேட்டாலும் நமக்கு அளிக்கவல்லவர் நம் இறைமகன் என்பதை மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம். செப உணர்வுடன் பக்தியோடு பரமனின் பாதத்தில் அமர்ந்து இறையாற்றல் பெறுவோம். இறைமகனின் வார்த்தையில் அமைதிப் பெறுவோம்.

சுயஆய்வு

  1. நான் என்ன செய்ய வேண்டும்?
  2. இறைமகன் விடுக்கும் வேட்கை என்னில் உணர்த்தும் செய்தி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தையில் முழு நம்பிக்கையோடு வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு