அருள்வாக்கு இன்று

அக்டோபர் 26-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 13:1-9

இன்றைய புனிதர்


புனித இவாரிஸ்டஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார். லூக்கா 13:5

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தயில் இயேசு, பலிச் செலுத்திக் கொண்டிருந்த கலிலோயரைப் பிலாத்துக் கொன்றான் என்ற செய்தி இயேசுவை அதிரச் செய்தது. காரணம் கொலைச் செய்யப்படவர்கள் அனைவரும் பாவிகள் என்று நினைக்கும் அம்மனிதர்களை விட இவர்களைப் பாவிகள் என்றா நினைக்கிறீர்கள். மாறாக மனிதன் செய்கின்ற குற்றத்திற்கு அவன் மனம் வருந்தி மனம் மாறாவிடில் அவனும் அவ்வாறே அழிவான் என்ற அறிவுபூர்வமான நிசப்தமான செய்தியை முன் வைக்கின்றார். குற்றவாளிக்குத் தண்டனை உறுதி. இருப்பினும் செய்தத் தவறை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புப் பெறும் போதும் மீண்டும் இத்தகைய தவறைச் செய்யமாட்டேன் என்று உறுதிக் கூறும் போதும் அவன் மீட்பு பெறுவான் என்ப இதன் கருப்பொருள். எனவே மனம் மாறுவோம்! இறையடிச் சேர்வோம்.

சுயஆய்வு

  1. மனம் மாற எனது முயற்சி யாது?
  2. செய்தத் தவறை நினைத்து மனம் வருந்துகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் வாழும் இவ்வுலகில் என் தவறுகளை உணர்ந்து வருந்தி மனம் மாறிடும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு