அருள்வாக்கு இன்று
அக்டோபர் 25-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 12:54-59
இன்றைய புனிதர்
புனித கிறிஸ்பின், கிறிஸ்பினியன்
லூக்கா 12:54-59
புனித கிறிஸ்பின், கிறிஸ்பினியன்
வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்துப் பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? லூக்கா 12:56
இன்றைய நற்செய்தியில் இயேசு வெளிவேடகாரரைச் சாடுகின்றார். எப்படிஎனில் கொள்ளை- கொலை- பொறாமை-கோபம்-பேராசைப் போன்ற அனைத்துப் புதையல்ளையும் அகத்தே வைத்துக் கொண்டு வெளியில் வெள்ளைப் புடவையும்,அங்கியும் அணிந்து- அணிகலன்களையும் போடாமல் இயேசுவின் பெயரால் தங்கள் செல்வங்களை மாற்றிவரும் வெளிவேடகாரர்களுக்குத் தான் இவை பொருந்தும். நிலத்தின் தன்மையும் அறிந்தும், வானத்தின் தன்மையும் அறிந்தும் தாங்கள் என்ன செய்கின்றோம், போதிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் வணிகமாக மாறி வருகின்றதையும் மறந்து விடுகின்றனர். அன்றாடக் கூலியாளிடமும் தசமபாகம் என்ற முறையில் வசூலிக்கும் நிலைதான் அதிகரித்துள்ளது.
அன்பு இயேசுவே! என்னில் புதுந்து எனக்குள்ள தீயவைகளை அகற்றி நீர் வாழும் ஆலயமாக மாற்றும் வரம் தாரும். ஆமென்.