அருள்வாக்கு இன்று
அக்டோபர் 24-வியாழன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 12:49-53
இன்றைய புனிதர்
புனித அந்தோணி மரிய கிளாரெட்
லூக்கா 12:49-53
புனித அந்தோணி மரிய கிளாரெட்
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா 12:51
இன்றைய நற்செய்தியில் உலகில் பிளவு உண்டாக்கவே வந்தேன் என்கிறார் இயேசு. இச்சமுதாயத்தில் இன்றைய நிலையில் உரிமைகளைப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நீதிக்காகப் போராடவேண்டியுள்ளது. ஆனல் அன்றைய நிலையும் யூதர்களின் ஆதிக்கத்தில் மக்கள் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஆனால் இன்று அதிகனமான சூழலில் மக்கள் அவதிப் படுகின்றார்கள். தங்கள் தேவைகளைப் போராடித் தான் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே உலகில் தீயை மூட்டவே வந்தேன் என்றார். ஏழைகளின் துன்பம் துயரங்கள் மாளிகையிலிருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே பல போராட்டங்களுக்கிடையில் நீதியை, அமைதியைப் பெற வேண்டும் என்பதே இயேசுவின் பேச்சு.
அன்பு இறைவா! நீதியான வாழ்வை எமக்குத் தாரும். ஆமென்