அருள்வாக்கு இன்று
அக்டோபர் 23-புதன்
இன்றைய நற்செய்தி
லூக்கா12:39-48
இன்றைய புனிதர்
கப்பெஸ்ட்ரானோ நகர் புனித ஜான்
லூக்கா12:39-48
கப்பெஸ்ட்ரானோ நகர் புனித ஜான்
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். லூக்கா12:48
இன்றைய நற்செய்தியில் கடமையும்,பொறுப்பும் உள்ளவர்கள் உறவுக்கும் உரிமைக்கும் சொந்தமானவர்கள் என்பதை இறைமகன் வெளிப்படுத்துகின்றார். ஏனோதானோ ன்ற எதையே செய்தோம் வந்தோம் போனோம் என்ற பொறுப்பற்றவர்களைச் சுட்டிகாட்டுகின்றார். எனவே ஒவ்வொருவருக்கும் சில கடமைகளும் பொறுப்புகளும் இறைவனால் அளிக்கப்பட்டுளது. அதனைப் புரிந்துகொண்டு அதை மற்றவர்களுக்கும் அளிக்கும் எண்ணம் மேலேங்க வேண்டும். ஒப்படைக்கப்பட்டவைகளையும் ஒன்றுக்கு நூறாகப் பலுகிப் பெருகக் செய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதை உணர்ந்தவார்களாய் இருக்கவே இயேசு நமக்கு உணர்த்துகின்றார்.
எதிர்பார்ப்புக்குரியவரே! எம் இறைவா! என் பணிகளை எனக்கு உணர்த்தி மற்றவருக்கும் பணிசெய்திடவரம் அருளும் . ஆமென்.