அருள்வாக்கு இன்று

அக்டோபர் 22-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 12: 35-38

இன்றைய புனிதர்


புனித இரண்டாம் ஜான்பால் -திருத்தந்தை

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். லூக்கா 12:38

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு “விழிப்பாயிருங்கள். எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்” என்று எச்சரிக்கின்றார். இறைவனுடைய போதனைபடி வாழ்வோமாகில் எந்தக் கவலையுமின்றி வாழலாம். நாமோ இவ்வுலக வாழ்வே நிரந்திரம் என்று ஓடி ஓடிச் செல்வம் நமக்கே உரியது. நாம் உண்டு, குடித்து மகிழலாம் என்று பகற்கனவுக் காண்போர் பலர் உண்டு. அத்தகையோருக்கும் இறைமகன் எச்சரிக்கின்றார். நாம் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்வோம் என்பது நமக்கே தெரியாத சூழலில் அழ்ந்துப் போகும் செல்வத்திற்காகப் போராடாமல் நிலை வாழ்விற்காக நமக்குள்ளதை ஏழை எளியவரோடு பகிர்ந்துப் பல்லுறவுக் காண்போம். இத்தகையோரை இறைவன் தான் ஏற்பாடுச் செய்துள்ள வாகை அரியணையில் என்றென்றும் வாழச் செய்வார். இத்தகையோரே பேறு பெற்றவர்களாகின்றோம்.

சுயஆய்வு

  1. விழிப்பாய் இருக்க என் முயற்சி யாது?
  2. இறைமகனின் வருகையை எதிர்கொள்ள என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது இரண்டாம் வருகை எதிர் கொள்ளும் ஆற்றல் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு