அருள்வாக்கு இன்று

அக்டோபர் 21-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 12:13-21

இன்றைய புனிதர்


புனித ஹிலாரியன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார். லூக்கா 12:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, இவ்வுலகச் செல்வத்தின் மேன்மையைச் சாடுகிறார். நிலையற்ற உலகம், நிலையற்றச் செல்வம் இரண்டுக்கும் இடையே மனிதனின் போராட்டம். சொத்து நிலையானதா? நிலைவாழ்வு மேலானதா? எதை இழந்து நிலைவாழ்வைப் பெறமுடியும்? என்று சிந்திக்க இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது. அழிந்துபோகும் செல்வத்தைக் கொண்டு நிறைவாழ்வை அடையமுடியும். எப்படி எனில் திரண்டச் செல்வம் உடையவர் எழை எளியோரின் வாழ்வாதாரம் உயர்ந்திடப் பகிர்ந்துக் கொடுக்கும் போது தானும் வாழ்ந்து அடுத்திருப்பவனும் வாழும்போது மறுவாழ்வில் நிச்சயம் நிலைவாழ்வை அடைவர் என்பதே நற்செய்தியின் கருப்பொருள். எனவே தான் இவ்வுலகப் பேரசைக்கு இடம் கொடாமல் எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார் இயேசு.

சுயஆய்வு

  1. செல்வம் என்றால் என்ன?
  2. செல்வம் தரும் வாழ்வு எத்தகையது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இவ்வுலகச் செல்வத்தைத் தவிர்த்து நிலை வாழ்வையடையும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு