அருள்வாக்கு இன்று
அக்டோபர் 20-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மாற்கு 10:32-45
இன்றைய புனிதர்
புனித பெர்டில்லா போஸ்கார்டியன்
மாற்கு 10:32-45
புனித பெர்டில்லா போஸ்கார்டியன்
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். மாற்கு 10:45
இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் சீடர்களான யாக்கோபும், யோவானும், “நீர் அரியணையில் அமரும்போது வலப்புறமும் இடப்புறமும் அமரும் பாக்கியம் எங்களுக்கு அருள வேண்டும்” என்று கேட்டதும், இறைமகன், "நான் ஏற்கும் துன்பக் கிண்ணத்தில் நீரும் பருகுவீர், திருமுழுக்கும் பெற உம்மால் இயலும். ஆனால் வலப்புறமும் இடப்புறமும் அமரும் பாக்கியம் என் விருப்பம் அல்ல, என் தந்தையின் விருப்பம்தான். முதன்மை இருக்கைகளைப் பிடிக்க விரும்பும் எவரும் அனைவருக்கும் பணியாளராக இருக்க வேண்டும். எனது வருகைத் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டுப் புரியவே மண்ணுலகம் வந்தேன். மேலும் பலரது மீட்புக்காக, என் உயிரையும் கொடுக்கவும்தான் இவ்வுலகிற்கு வந்தேன்” என்றார்.
அன்பு இயேசுவே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உமது வாக்கு என் வாழ்வாகிடும் வரம் தாரும். ஆமென்.