அருள்வாக்கு இன்று
அக்டோபர் 18-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 10:1-9
இன்றைய புனிதர்
திருத்தொண்டர் புனித லூக்கா
லூக்கா 10:1-9
திருத்தொண்டர் புனித லூக்கா
அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. லூக்கா. 10:2
இன்றைய நற்செய்தியில் அறுவடைக்குத் தேவையான வேலையாட்களை இறைமகன் கேட்கின்றார். எங்குப் பார்த்தாலும் துன்பம் துயரம் போராட்டங்கள் பிரச்சனைகள் தீவிரவாதம் குண்டுவெடிப்புகள் போன்ற தீச்செயல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை யெல்லாம் சரிகட்டவேண்டுமானல் நல்ல இறை உள்ளம் படைத்த எங்கும் இடைவிடாது பணிச்செய்ய வேலையாட்களை இறைமகன் கேட்கின்றார். அதற்கான வேலையாட்களை நம் குடும்பங்களிலே தகுந்த இறைபற்றுதலோடு வளர்த்தெடுத்து பிள்ளைகளை நாமிப்பணிக்கு அனுப்பதயாராக இருக்க வேண்டும். இறைபிரசன்னம் மனிதைனம் எங்கு நிலைக் குலைந்துள்ளதோ அங்கே பணியாற்றகூடிய வேலையாட்களை நாம் வளர்த்துகொடுப்போமா? வீட்டுக்கொருவரை துறவறத்திற்கு அர்ப்பணிப்போமா?
அன்பு இயேசுவே உம் அறுவடைக்குத் தேவையான வேலையாட்களை எம் இல்லத்திலிருந்து தேர்ந்து கொள்ள வரம் தாரும் ஆமென்.