அருள்வாக்கு இன்று

அக்டோபர் 17-வியாழன்

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். லூக்கா 11:52

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, திருச்சட்டவல்லுனர்களையும், இன்றைய அறிஞர்களையும் சாடுகின்றார். காரணம் அறிவுச் களஞ்சியத்தின் திறவுக்கோலைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டு தானும் வாழ்வதில்லை. அடுத்தவர்களையும் வாழ வைப்பதில்லை என்ற குறுகிய மனம் படைத்தோர் நம்மிடையே பலர் நடமாடுகின்றார்கள். அனைவருக்குமாய்த் தாம் அறிந்தவற்றைப் புரிந்தவற்றைத் தானும் அனுபவித்து அடுத்தவரின் வாழ்விலும் ஒளியாகிட, நல் ஆசானாக வலியுறுத்துகின்றார். வாருங்கள் அன்பர்களே! நண்பர்களே! இறைமகனின் போதனைகள் திருமறையில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்துப் புரிந்து வறியோரின் வாழ்வு மலர இந்த அறிவுக் களஞ்சியத்தை அவர்களிடையே வளர விடுவோம்.

சுயஆய்வு

  1. அறிவுக் களஞ்சியம் என்றால் என்ன? அறிகிறேனா?
  2. பெற்ற அறிவுத் தறனை அடுத்தவரில் பகிர்ந்து மகிழ்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அறிவுக் களஞ்சியத்தின் திறவுக்கோலை நான் பெற்றுச் சுவைத்து அடுத்தவரில் பகிர்ந்து வாழும் வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு