அருள்வாக்கு இன்று

அக்டோபர் 16-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 11:42-46

இன்றைய புனிதர்


புனித மார்கரெட் மரிய அலக்கோக்,

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத் தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்: ஆனால் அவற்றையும் விட்டு விடலாகாது. லூக்கா 11.42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தாங்கள் கொடுக்கின்ற காணிக்கைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். எப்படிஎனில் பலர் தாங்கள் பல தீயவழிகளில் பொருள் சேர்த்து அடுத்தவர் தம்மைப் பாரட்டவேண்டுமென்று காணிக்கைகளைப் பெருமையாகக் கொடுப்பார்கள். ஆனாலவர் உள்ளமோ இறைவனை விட்டு வெகுதூரத்தில் உள்ளது. அவர் பல வழிகளில் பலரை ஏமாற்றிப் பொருட்கள் சேர்த்து , அதை மறந்து அகத்தில் பலகுறைகளை வைத்துப் புறத்தில் அதற்குப் பரிகாரம் தேடுபவர்களாக இருக்கின்றார்கள். அப்படிபட்டவர்களையே இயேசு கண்டிக்கின்றார். உன் பொன்னோ பொருளோ அல்ல உன் ஆன்மாவை எனக்குத் தா. அதில் நான் வாசம் செய்ய வேண்டும் என்பதே அவர் அவா. எனவே இயேசுவைப் பின் தொடர்வோமா?

சுயஆய்வு

  1. நான் எப்படிபட்ட நிலையில் வாழ்கின்றேன்?
  2. களைகளைக் கலைந்து விட்டு உண்மைகளைக் கடைபிடிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! என் காணிக்கை அடுத்தவர்களுக்காக அமைந்து என் உள்ளம் உம் ஆலயமாக மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு