அருள்வாக்கு இன்று
அக்டோபர்-
இன்றைய நற்செய்தி
லூக்கா 11:37-41
இன்றைய புனிதர்
புனித அவிலா தெரேசா St. Teresa of Avila
லூக்கா 11:37-41
புனித அவிலா தெரேசா St. Teresa of Avila
உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அருள்மொழி :உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். லூக்கா 11:41
இன்றைய நற்செய்தியில் பரிசேயர் இயேசு விருந்திற்கு முன் கை கழுவாததை சுட்டிக் காட்டுகின்றனர். வெளிப்புறதூய்மை வெளிவேடமே, அகத்தில் தூய்மை வேண்டும். அகத்தில் பொன்னாசை பொருளாசை சுயநலம் அடுத்தவரின் உள்ளத்தை கெடுப்பது போன்ற பல தீமைகள் நிறைந்துள்ளது. அந்த அகந்தையை சுத்தபடுத்தி தூய்மையாக்குங்கள். அதனை மறைவாக உள்ள உங்கள் தந்தை அறிவார். அதற்கேற்ப கைமாறும் கிடைக்கும். வெளித்தூய்மையை விட அகத்தூய்மை மேலானது என்று சுட்டி காட்டுகின்றார்.
அன்பு இயேசுவே! நான் புறத்தூய்மையை விட அகத்தூய்மையோடு வாழ வரம் தாரும். ஆமென்.