அருள்வாக்கு இன்று

அக்டோபர் 14- திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 11:29-32

இன்றைய புனிதர்


புனித முதலாம் கல்லிஸ்துஸ் - திருத்தந்தை St. Callistus I

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். லூக்கா 11:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் யோனா இறைவாக்கினர் நினிவே மக்களுக்காக அனுப்பப் பட்டார். அந்த மக்களின் தீச் செயல்களால் அவரை அந்நகருக்குச் செல்ல அவர் மனம் இடம் தரவில்லை. இருப்பினும் இறைவன் அவரைத் திமிங்கலம் வயிற்றில் மூன்று நாட்கள் வைத்து மூன்றாம் நாள் நினிவே நகரின் கரையில் சேர்த்து அம்மக்களை மீட்டார். அந்த அடையாளம் இறைமகனுக்கும் இறைவனால் அருளப்பட்டு இந்த மக்களை மீட்டெடுக்க இந்த மண்ணகம் வந்தார். நமக்காகப் பாடுகள் பலபட்டு மாித்தார், மீண்டும் மூன்றாம் உயிர்த்தெழுந்து மக்களை அழிவுப் பாதையினின்று மீட்டெடுத்தார். இதுவே நமக்கு அடையாளமாக அமைந்தது.

சுயஆய்வு

  1. நான் எப்படி அடையாளமாய் மாறப் போகின்றேன்?
  2. மாறி மானிடருக்காக நான் செய்யப் போகின்றேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது சாட்சியாகவும் உமது அடையளத்தை வறியோர் நெஞ்சில் தடம் பதிக்க வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு