அருள்வாக்கு இன்று

அக்டோபர் 13-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:17-30

இன்றைய புனிதர்


புனித எட்வர்ட் கிங்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். மாற்கு 10:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவைப் பின்தொடர விருப்பமுள்ளவர்கள் எவ்வாறு இவ்வுலக வாழ்வை வாழ்வாக்க வேண்டும் என்பதற்கு இறைமகன் ஓர் உவமையைப் பதிவு செய்கின்றார். ஒரு செல்வந்தர், “அனைத்தையும் நான் கடைப்பிடிக்கின்றேன். நான் விரும்பினால் இறையரசில் நுழைய முடியும்” என்ற ஏக்கத்துடன் தன் ஆவலை இறைமகனிடம் பதிவு செய்கின்றார். இறைமகன், “தேவ கட்டளைகளைக் கடைப்படி” என்றதும், “அனைத்தையும் கடைப்பிடிக்கிறேன்” என்றார். இறுதியாக அவரைக் கூர்ந்துக் கவனித்து, “இறையரசு உன் வயப்படாது. காரணம், உனக்குள்ள செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு என்னைப் பின் செல்” என்றார். இதனைக் கேட்டச் செல்வந்தர் திரும்பிச் சென்றார். காரணம் அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. அவர் அதன் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். எனவே இயேசு, “மனிதரால் எதுவும் முடியாது, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

சுயஆய்வு

  1. செல்வம் என்றால் என்ன?
  2. செல்வத்தின் மீது பற்றா? அல்லது இறைப்பற்றா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, நிலையற்றச் செல்வத்தைக் கொண்டு நிலையான செல்வம் ஈட்டிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு