அருள்வாக்கு இன்று

அக்டோபர் 12-சனி

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


புனித வில்ப்ரடு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார். லூக்கா.11:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு 'பேறுபெற்றோர்” எத்தகையோர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அதாவது இறைவார்த்தையைத் தனது வாழ்வில் கடைப்பிடித்து அதன்படி இறையாட்சிக் கூறுகளை நீதி, நேர்மை, அன்பு, பகிர்வு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்கங்களைத் தனக்கு அடுத்திருப்போரின் நலனுக்காக எவர் கடைப்பிடித்துத் தானும் புனித வாழ்வு வாழ்ந்து அடுத்தவரையும் அத்தகைய வாழ்விற்கு அழைத்துச் செல்வோரோ அவரே 'பேறுபெற்றோர்” என்று ஆணித்தரமாக உரைக்கின்றார். எனவே அன்பர்களாகிய நாமும் நமது வாழ்வில் இறைவார்த்தையின் ஒளியில் இறையரசுக் கூறுகளை இவ்வுலகில் தடம் பதிப்போம். என்ன நேர்ந்தாலும் அதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

சுயஆய்வு

  1. 'பேறுபெற்றோர்” என்பதை நான் உணர்ந்துள்ளேனா?
  2. அதன்படி வாழ என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இறைவார்த்தையின் ஒளியில் நான் வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு