அருள்வாக்கு இன்று

அக்டோபர் 10- வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா11:5-13

இன்றைய புனிதர்


புனித பிரான்சிஸ் போர்கியா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்." லூக்கா 11:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின்“தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற இறைவார்த்தையைச் சற்று ஆழ்ந்துத் தியானிக்க அழைக்கின்றேன். இன்று அனேக குடும்பங்கள் நல்ல வசதி வாய்ப்புகளுடன், அனேகர் கீழும் இல்லாமல் மேலும் உயர முடியாமலும் வேறு சிலர் அடிமட்டத்திலும் இவ்வுலக நிலையற்ற வாழ்வை அடிதளமாக்கிக் கொண்டு வாழும் நிலை நாம் காண்கின்றோம். ஆனால் இறைமகன் வருகையும் அவருக்கு முன் வந்த திருமுழுக்கு யோவான் இந்தத் தரப்பினரையும் சமதளமாக்க வந்தார். என்பதை நாம் சற்றுப் பின்னேக்கிச் சிந்திக்க அழைக்கப் படுகின்றோம். எப்படியெனில் இருவர் வருகையும் இறைவனால் அனுப்பப்பட்டது. முந்தியவர் சமதளமாக்க வந்தார். அடுத்து இறைமகன் அனைவரையும் தன் தந்தையின் மக்கள் என்ற பார்வையில் மீட்டார். ஆனால் நாம் கேட்டதும் - தட்டியதும் - தொலைந்துப் போன வாழ்வையும் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் நாம் இறைவன் முன் மிளர வேண்டுமானால் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

சுயஆய்வு

  1. நான் மேற்கண்ட நிலையில் எதைச் சார்ந்துள்ளேன்?
  2. என் மனநிலை எத்தகையது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்க வரம் அருளும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு