அருள்வாக்கு இன்று

அக்டோபர் 8-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 10:38-42

இன்றைய புனிதர்


புனித செர்ஜியஸ், பேச்ஹஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்: அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ; என்றார். லூக். 10:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகக் காரியங்களில் எது தேவையோ அவற்றை மட்டும் உணர்ந்துச் செய்பட்டாலே போதும் மற்றத் தேவையற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தானும் சோர்வுற்று அடுத்தவரையும் அலைக்கழிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று நமக்கு எச்சரிக்கை விடுகின்றார். எப்படி எனில் நாம் இவ்வுலகில் அலைபாய்ந்துப் பலவழிகளில் சம்பாதிக்கும் பொன்னோ, பொருளோ, சொத்தோ நிலையானது அல்ல. அதனை யாரும் நிலைவாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இங்கு நாம் எதை அடுத்தவரின் வாழ்விற்காகச் செய்கின்றோமே அதன் பலனே நமக்கு முன் பதிவு செய்யப்படும் நிலைவாழ்வின் சொத்து.

சுயஆய்வு

  1. நான் ஒருமித்த கருத்தோடு பணி வாழ்வை மேற்கொள்கின்றேனா?
  2. அல்லது அனைத்திலும் முதன்மையாக இருக்க விரும்புகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது பணிகளைச் செய்யும் ஒரு நல்ல பணியாளராக வாழும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு