அருள்வாக்கு இன்று

அக்டோபர் 6-

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:2-16

இன்றைய புனிதர்


புனித புரூனோ

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்."மாற்கு 10:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பரியர் கேள்விக்குச் சாட்டையடிப் போன்று ஒரு பதிலைப் பதிவு செய்கின்றார். காரணம் மோசே கட்டளைப் பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக. மோகப் பாவம் செய்யாதிருப்பாயாக. இந்த இரண்டு கட்டளைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். ஆனால் ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பதைத் தகர்த்தெறிந்து, கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இனி இவர்கள் இருவரல்ல ஓரே உடல். கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவே இந்தச் சட்டம் என்பதை உணர்ந்தவர்களே இந்தக் கேள்வியை முன் வைத்து இறைமகனைச் சோதிக்கும் நிலையை உணர்ந்த அவர் சரியாகச் சாட்டையடிக் கொடுக்கிறார். எனவே கணவனும் மனைவியும் தவறும்போது அவர்கள் விபச்சாரம் செய்கின்றனர் என்பதே இறைமகன் விடுக்கும் செய்தி. இதனை உணர்ந்து வாழ்வோம்.

சுயஆய்வு

  1. திருமணம் என்றால் என்ன? அறிகிறேனா?
  2. ஈர் உடல் ஓர் உடல் இதன் கருப்பொருளை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! குடும்பம் என்னும் கோயிலில் கணவன், மனைவி என்னும் உறவை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு