அருள்வாக்கு இன்று

அக்டோபர் 5-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 10:17-24

இன்றைய புனிதர்


புனித மரிய பவுஸ்தீனா கொவல்ஸ்கா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ;நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். லூக்கா 10:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தனது வருகையும் அவரை அனுப்பியவர் தன் தந்தை தான் என்பவற்றைக் கண்டுணரும் சீடர்கள் பேறு பெற்றேர் என்கின்றார். காரணம் இவற்றையெல்லாம் உணர்த்தியவர் தந்தையே என்பதைத் தெளிவாகச் சொல்கின்றார். ஆம் சகோதர சகோதரிகளே, அவரது அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்த அதன்படி வாழும் பேறு பெற்றோர்களாகின்றோம். இஃது இறைத்திட்டம். நாம் நமது என்பதைக் கடந்து பொதுநலம். பொதுவாழ்வு என்று பணியாற்றும்போது முழுமையடைகின்றோம். இதனையே இயேசு விரும்புகின்றார். அவரது மீட்புப் பணியில் உலகம் முடியும் வரை நமக்குப் பங்கு உண்டு என்பதை உணர்ந்தவர்களாய் பணியாற்றும்போது "பேறுபெற்றார்"களாக ஆகின்றோம்.

சுயஆய்வு

  1. இறையரசு என்றால் என்ன என்பதை உணர்ந்துள்ளேனா?
  2. அதனை இந்த மண்ணகம் காண எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது மீட்பு பணியில் என்னையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு