அருள்வாக்கு இன்று

அக்டோபர் 4-வெள்ளி

இன்றைய நற்செய்தி

லூக்கா 10:13-16

இன்றைய புனிதர்


புனித பிரான்சிஸ் அசிசி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். லூக்கா 10:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இவ்வுலகில் தான் எதற்காக வந்தாரோ அதனை முழுமையாகச் செய்து முடிக்கப் பல ஆதிக்கவாசிகள் தடையாக இருந்தனர். எனவே தான் இந்த ஊர்களைச் சபிக்கினறார். காரணம் உலகில் மாற்றம் காணவே பலவல்லச் செயல்களை இறைமகன் மக்களுக்காகச் செய்கின்றார். அவற்றை ஏற்காத நிலையில் அவர் மக்களைச் சாடுகின்றார். ஆம் அன்பர்களே! நமக்கும் இறைமகன் அழைப்பு விடுக்கின்றார். நாம் எப்படி வாழ வேண்டுமென்று அன்புக் கட்டளைகளை விடுக்கின்றார். நாம் அவரது விழுமியங்களை வாழ்வாக்கும்வோம். கடந்து செல்வோம். சாதி சமயங்களை இறைவனில் மனிதகுலம் ஒன்றே என்று நாம் வாழும்போது உலகம் மாற்றம் பெறும்.

சுயஆய்வு

  1. அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றேனா?
  2. அதனை வறியரில் பகிர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தையின் படி வாழும் பேற்றினை அளித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு