அருள்வாக்கு இன்று

அக்டோபர் 3-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 10:1-12

இன்றைய புனிதர்


புனித ஈவால்ட்ஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. லூக்கா 10:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி இயேசு நற்செய்தியை அநிவிக்க அனுப்புகின்றார். எப்படிஎனில் உயிருள்ள இறைவனின் "வார்த்தையை" ஏற்று அதன்படி வாழ்பவர்களிடம் உண்டு குடித்து மகிழுங்கள். எனெனில் அவர்களுக்கு மிகுதியான கைம்மாறு கிடைக்கும் என்று அறிவிக்கின்றார். "இறையரசு" என்பது எல்லாரும் எல்லாமும் பெற்று ஏற்றதாழ்வுன்றி அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும்பேது அனைவருக்கும அனைத்தும் கிடைக்கும் என்று இறைமகன் அறைக்கூவல் விடுகின்றார். இதன் உட்பொருளை உணருவோமா? பிரதிபலன் எதிர்பாராமல் பணிச் செய்வோமா?

சுயஆய்வு

  1. இவ்வுலகத் தேவைகளைக் குறித்துமனம் வருந்துகின்றேனா?
  2. நிறைவாழ்வைக் காண என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்புத் தந்தையே இறைவா! இவ்வுலக நாட்டங்களை மறந்து மற்றவருக்கு உறுதுணையாக இருக்க நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு