அருள்வாக்கு இன்று
அக்டோபர் 2-புதன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 9:57-62
இன்றைய புனிதர்
காவல் தூதர்கள்
லூக்கா 9:57-62
காவல் தூதர்கள்
"ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்: ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார். லூக்கா 9:61
இன்றைய நற்செய்தி இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் பணியை ஆற்ற அதற்கான ஆயத்தபணிகளை மேற்கொண்டு அவரைபின் தொடர்கின்றேன் என்பதாகும். இறைமகன் நாம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். சமுதயாப்பணிகளோ மிகுதியாக உள்து அப்பணியில் நாம் ஈடுபடுவதற்கு முதலில் நாம் நம்மைத் தயார் படுத்த வேண்டும். எவ்வித சோதனைகள் பிரசனைக் எதிர்ப்புகள் வந்தாலும் துவண்டு விடாமல் அனைத்தையும் எதிர்கொன்னபோதுமான இறையனுபவத்தையும், அருள் வரங்களையும் பெற்று தன்னையே அர்ப்பணித்தலே இன்றைய நற்செய்தியின் சாரமாகும். எனவே இறைவன் பாதம் சரன் அடைவோமா?இறைவார்த்தையை வாசிப்போமா? சிந்தித்து செய்வடிவம் தருவோமா?இப்படி தான் இறைவார்த்தையின்படி தொடர்வதாகும்.
அன்பான இயேசுவே என் புறமாயைகளை துறந்து எனக்குள் இருக்கும் இறைவனை ஏழையின் சிரிப்பில் காணும் வரம் தாரும். ஆமென்