அருள்வாக்கு இன்று

அக்டோபர் 1-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு18:1-5,10

இன்றைய புனிதர்


குழந்தை இயேசுவின் புனித தெரேசா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். மத்தேயு 18:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அழுத்தமாகக் கூறுகின்றார். விண்ணரசிற்குத் தகுதியுடையோர் குழந்தைகளைப் போல் உள்ளம் கொண்டவராக இருத்தல் வேண்டும். குழந்தைக் கள்ளம் கபடம் அறியாது. தூய உள்ளத்தைக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் தன்னைத் தாழ்த்திக் கொள்பவரும் இறையரசில் நுழையத் தகுதியுடையவர்கள் ஆவார். எனவே அன்பார்ந்தவர்களே! குழந்தைகளைப் போல் உள்ளம் கொண்டு எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இறையாட்சி மண்ணில் மலர வேண்டும் என்ற விருதுவாக்கை நாம் வாழ்வாக்குவோம். அன்றே இறையரசு மண்ணகம் காணும். அதற்கான பணியைத் தொடருவோம்.

சுயஆய்வு

  1. நான் இறையரசு என்ன என்பதை உணர்ந்துள்ளேனா?
  2. அதனை அடைய எனது குறிக்கோள் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது மதிப்பீடுகளை மண்ணகத்தில் ஊன்றிட எனக்குப் போதுமான ஞானத்தைத் தந்தருள இறைவா உமை மன்றாடுகின்றேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு