அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 30-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 4:31-37

இன்றைய புனிதர்

புனித ஜான் ரோச், மறைசாட்சி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்: அவையும் போய்விடுகின்றனவே! லூக்கா 4-34

வார்த்தை வாழ்வாக:

மானிடராகிய நாம் திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக்கொண்டஇறையாசீரை இவ்வுலகப் பொருட்கள் மீதான ஆசையால் இழந்துவிடுகின்றோம். அந்நிலையில் தான் தீய ஆவிசூழ்ந்துகொள்கின்றது. இதுவே உண்மை. எனவே நம் இயேசுவின் பாதையில் பயணிக்கும்போது அவர் நம்மிலும் நாம் அவரிலும் சங்கமிக்கும் போது தீயஆவிகளை ஓட்டும் அதிகாரம் நம்மில் உதயமாகின்றது. அப்பொமுது அனைத்தும் நிகழும். இதையே இயேசு ”என் மீது நம்பிக்கை கொண்டோர் என்பெயரால் பேய்களை ஓட்டுவார்கள்” என்று நம்மை அவரில் இணைய அழைக்கின்றார். ஏற்போமா?

சுய ஆய்வு

  1. முதலில் நான் இறைமகன் இயேசுவை என்னில் கொண்டுள்ளேனா?
  2. பெற்றுகொண்ட இறையாசீரை பிறருக்கு பகிர்ந்தளிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் என்னில் குடிக்கொள்ள என்னில் இருக்கும் கறைகளைக் களைந்துத் தூய இதயம், தூய கருத்துபடைத்தவராக மாற வரம் தரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு