அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 29-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:17-29

இன்றைய புனிதர்

புனித திருமுழுக்கு யோவான் பாடுகள்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். மாற்கு 6:17-29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தவறை சுட்டி காட்டியவரையே எதிரியாக கொண்ட ஏரோதியா, யோவானை கொன்றிட தகுந்த நேரம் வருமா என்றிருந்தாள். காரணம் தன் கணவனை விட்டு ஏரோதை வைத்திருந்தாள். இதனை இது முறையல்ல என்று கண்டித்த திருமுழுக்கு யோவானின் தலையையே பரிசாக தன் வழியாக பெறுகின்றார்கள். ஆம் இறை மக்களே, இன்றும் அனேகர் தன் வாழ்வில் தடம் புரண்டு போவதை காண்கின்றீர். அதே நிலையில் இன்றும் தவறைச் சுட்டிகாட்டுபவர்களை அழித்துவிட எண்ணும் கோரக் கும்பல் வாழ்கின்றனர். இத்தகையோர் மனம் மாற இந்த நிகழ்வு நமக்கு ஓர் பாடமாக அமைகிறது. இதனை வாழ்வில் ஏற்போம். தவறு ச்ய்யாமலும், செய்பவர்களை பன்னிப்பவர்களாக மாறுவோம்.

சுய ஆய்வு

  1. நான் தவறு செய்கின்றேனா?
  2. அடுத்தவரின் தவறை தகாத முறையில் வஞ்சிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் நல்ல சிந்தனையுடையவனாக வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு