அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 27-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 25:14-30

இன்றைய புனிதர்

புனித மோனிக்கா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். மத்தேயு 25:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் எத்தைய மனதிடையோர் விண்ணரசில் நுழையத் தகுதியுடையவர்கள் என்பதற்கு ஓர் உவமை மூலம் விலக்குகின்றார். அதாவது ஐந்து தாலந்தை பெற்று பத்துத் தாலந்தாக உயர்த்தியவன் இறை வார்த்தைகளைப் படித்து உணர்ந்து அதனை அடுத்தவருக்குப் பகிர்ந்து அவரது மதிப்பீடுகளைத் தரணியில் மற்றவரையும் வாழ வைக்கும் அன்புள்ளம் கொண்டவருக்கு ஒப்பாவான். எனவே தான் நம்மையும் இம்மண்ணகத்தில் நாம் எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பதை விட எப்படி வாழ்கின்றோம் என்பதை இறைமகன் விரும்புகின்றார். எனவே அவரது உவமைகளை ஏற்போம்.

சுய ஆய்வு

  1. நான் என்னைப்பற்றியே சிந்திக்கின்றேனா?
  2. அடுத்தவரையும் என்னோடு இணைத்திருக்கச் செய்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நானும் புனிதமடைந்து அடுத்தவரையும் புனிதமடைய எனக்கு ஆற்றலைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு