அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 20-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 23 : 1-12

இன்றைய புனிதர்

புனித பெர்னார்டு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். மத்தேயு 23:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்றைய யூத சமுதாயத்தில் மோயீசனின் சட்டத்தைக் கொண்டு அடுத்தவர்களை அதிகாரத்திற்குட்படுத்தி, தாங்கள் மட்டும் எந்த நிலைக்கும் மாறாமல், அடுத்தவர்களையே சாடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார். அதாவது இன்றைய சமுதாயத்தில் ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்துச் சமத்துவம் காண்பதே இறைமகனின் ஆவல். எனவே அவர் தான் தலைமைப் பண்பைத் துறந்து பணிவிடை புரிபவராகச் சீடர்களின் பாதங்களைக் கழுவி நமக்குத் தெளிவுப்படுத்தினார். எனவே நாம் இறைமகனின் இறைத்தன்மை துறந்து மனித பிறப்பு எடுத்தது இதற்குச் சான்றாகும் என்பதை உணருவோம். எனவே அன்பு சகோதர சகோதரிகளே, எந்த நிலையிலும் "தான்" என்ற அகந்தை துறந்து தாழ்த்திக் கொள்வோம்.

சுய ஆய்வு

  1. நான் "தான்" என்ற அகந்தையைத் துறந்துப் பணிச் செய்ய மனம் காண்டுள்ளேனா?
  2. தாழ்ச்சி என்பது என்னில் காட்டும் செயல் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் தாழ்ச்சியுள்ளவனாக வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு