அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 12-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 19:3-12

இன்றைய புனிதர்

புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார். மத்தேயு 19:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மணவிலக்கு என்றால் என்னவென்பதற்குச் சான்று பகர்கின்றார். கணவன் மனைவி உறவு எத்தகையது? என்பதை உணராதப் பரிசேயரின் கேள்விக்குச் சாடுகின்றார். படைப்பிலேயே இறைவன் ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அவர்கள் இருவரல்ல, இனி ஒரே உடல் என்பதின் கருப்பொருளை உணராதப் பிறவிகளை இங்கே கண்டிக்கின்றார். ஒரு பெண் தனது கற்பை வேறு ஒருவனிடம் இழப்பாரெனில் அவள் பரத்தமைக்குள்ளாகிறார். இக்காரணமன்றி ஒரு பெண்ணை ஒதுக்கி வைப்பது முறையன்று என்றார். சீடர்கள் திருமணமே வேண்டாம் என்றதும் இயேசு அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழுத்தமான சிந்தனையைப் பதிவு செய்கின்றார். அருள்கொடை என்றால் திருப்பணிக்காக இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட குருத்துவத் திருக்கூட்டம் இவர்களன்றி மற்றவர்கள் திருமணம் செய்யலாம்.

சுய ஆய்வு

  1. திருமணம் என்றால் என்ன?
  2. அருள்கொடை என்றால் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் பெற்றுக் கொண்ட வாழ்வில் நிலைத்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு