அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு11-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 18:21-19:1

இன்றைய புனிதர்

புனித அசிசி நகரின் புனித கிளாரா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். மத்தேயு 18:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மன்னிக்க மறுத்த பணியாளின் உவமை வாயிலாக நாம் எப்படி அடுத்தவரை மன்னித்தால் தான் நாம் செய்யும் குற்றங்களை நமது விண்ணகத் தந்தையும் மன்னிப்பார் என்பதற்கு10 தெனாரிய உவமை வாயிலாக உணர்த்துகின்றார். இன்றைய காலசூழலில் சுயநலபோக்கே அனேகரிடம் மேலோங்கியுள்ளது. இந்நிலை மாறிட இன்றைய நற்செய்தி நமக்குச் சான்று பகிர்ன்றது. வாழும் போது அறச்செயல்களினால் இறை-மனித-உறவில் சங்கமித்தல் வேண்டும். உறவுகள் சமயங்களை - சாதிகளைக் கடந்து சமத்துவம் கண்டிட உழைப்போம். சகோதரர் சகோதரிகளிடம் அன்பின் அடையாளமாக உறவுகளைப் பலப்படுத்துவோம். பகைமையைத் தடுப்போம். சொத்துரிமைகளைப் பகிர்ந்து அளிப்போம். இவ்வுலகில் அனைத்தையும் தனதாகிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்போமெனில் என்ன இலாபம் என்பதை உணர்ந்து நற்செய்தியின்படி வாழ்வோம்.

சுய ஆய்வு

  1. நான் பிறர் குற்றங்களை மன்னிக்கின்றேனா?
  2. குற்றம் என்றால் என்ன? என்பதை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, என் குற்றத்தை நீர் மன்னிப்பது போலப் பிறா் குற்றத்தை மன்னிக்கும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு