அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 10-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 12:24-26

இன்றைய புனிதர்

புனித திருத்தொண்டர் லாரன்ஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். யோவான் 12:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, மாட்சிமை பெறும் நேரம் வந்துவிட்டதை வெளிபடுத்தியவராக, கோதுமை மணி மண்ணில் விழுந்து புதைந்தால் தான் செடி வளர்ந்து அதிக விளைச்சலை தரும். அதே பாணியில் இறைமகன் மண்ணில் மடிந்து உயிர்த்தால் மானிடருக்கு மீட்பு உண்டு என்ற மறையுண்மையை பதிவு செய்கிறார். தமக்காக வாழாமல் அடுத்தவரின் நலனுக்காக வாழ்வோர் நிலைவாழ்வை பெறுவர். என் பொருட்டும் இறைவார்த்தையின் பொருட்டும் தொண்டு செய்வோர் என்னை பின் பற்றி வரட்டும். எனக்கு தொண்டு செய்வோரை தந்தையும் மதிப்பளிக்கிறார். காரணம் தந்தையின் திருவுளத்தை நிறைவு செய்யவே இறைமகனின் வருகை. மகனுக்கு தொண்டு செய்வோர் தந்தையின் மாட்சியிலும் ஒன்றித்திருப்பர் என்பதை அறிவோம்.

சுயஆய்வு

  1. அடுத்தவரின் நலனில் அக்கறை உண்டா?
  2. நிலைவாழ்வை அடைய எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! சுயநலம் கருதாமல் பொதுநலம் காணும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு