அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 9-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 18: 5,10 - 12:-14

இன்றைய புனிதர்

புனித திருச்சிலுவையின் தெரசா பெனடிக்டா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு18:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியி இடம் எத்தகைய மனதுடையோர் தகுதியானவர் என்று மிகவும் ஆணித்தரமாக கூறுகின்றார். எப்படியெனில் சிறுப் பிள்ளைகளைப் போல் குழந்தை மனம் கொண்டவராக, கள்ளம் கபடமற்ற உள்ளத்தினராகவும், ஏற்றத் தாழ்வில்லா மனதையும் கொண்டவர்கள் தான் சிறு குழந்தைகள். எனவே தான் இயேசு போலி இறைவாககினர்கள், வெளிவேடக்காரர்கள், பொன்னாசை, பொருளாசையால் அடுத்தவரை வீழ்த்தி தான் தான் இவ்வுலகில் அனைத்திற்கும் பெரியவன் என்று மார்த்தட்டி வாழ்கின்ற பெரியோர்களை பார்த்து தான் இறை மகன் இவ்வாறு கூறுகின்றார். நீங்கள் குழந்தை போல் மாறாவிடில் உங்களுக்கு விண்ணரசில் இடமில்லை என்கின்றார். இதனை ஏற்போமா?

சுய ஆய்வு

  1. நான் என்ற அகந்தையை விட்டு இறங்கி வருகின்றேனா?
  2. சிறு குழந்தையின் மனம் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் எளிய குழந்தை மனம் கொண்டு வாழ வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு