அருள்வாக்கு இன்று

ஜூலை6-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 9: 14-17

இன்றைய புனிதர்


புனித மரிய கொரற்றி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். மத்தேயு 9:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நோன்பின் நோக்கம்பற்றி விளக்குகின்றார். இறைவனின் உடனிருப்பு அருகிலிருக்கும் போதும் நம்முள் அவரது பிரசன்னம் ஆட்கொள்ளும் போதும் நோன்பு தேவையில்லை என்பதை உணர்த்துகின்றார். அதாவது பாவச் சூழலுக்குள் புகுந்து விடும்போது நாம் நமது பலத்தை இழக்கின்றோம். இறைவனின் உடனிருப்பை இழக்கின்றோம். அந்நிலையில் இழந்ததை பெற்றுக் கொள்ள நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும் நோன்பு அவசியம் என்பதை இங்கே இறைமகன் விளக்குகின்றார். எனவே அதை நாமும் உணர்வோம். நமது வாழ்வில் அவரது உடனிருப்பை பெறுவோம்.

சுயஆய்வு

  1. நான் எனது செயல்களை உணர்ந்து பார்க்கின்றேனா?
  2. உணர்ந்து குறையிருப்பின் திருத்திக் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது உடனிருப்பு எனக்குத் தேவை என்பதை உணரும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு