அருள்வாக்கு இன்று

ஜூன் 29-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மத்தேயு. 16:13-19

புனித பேதுரு,பவுல் பெருவிழா
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

புனித பேதுரு,பவுல் பெருவிழா
அருள்மொழி:

உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. மத்தேயு. 16:18

வார்த்தை வாழ்வாக:

யோவானின் மகனான சீமோனே நீ பேறுபெற்றவன்! நீ பாறை இப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று வரை பேதுருவில் உள்ளது. இயேசுவை மெசியாவாகக் காணும் அருள் பெற்றவர். தலைமைகுருவின் பணிபெண்ணிடம் இயேசுவை மூன்று முறை மறுதலிக்கவும் செய்தார். இன்று புனித பேதுரு, புனித பவுல் பெருவிழா. இயேசுவை துன்புறுத்திய சவுலை புதிய பார்வைப் பெற்றுப் பவுலாக மாறச் செய்தார். இறைமகன் ஆண்டவர் பெயரால் இருவரும் போதிக்கவும் பேசவும் செய்தனர். புனித பவுல் ஆதிதிருச்சபையில் மக்களைச் சந்தித்து இராபகலாக உழைத்துத் தலதிருச்சபையை நிறுவினார். பேதுரு “பெந்தகோஸ்தே" பெருவிழா அன்று மூவாயிரம் பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்துத் திருச்சபையைத் தோற்றுவித்தார். ஆக இருவரின் விசுவாசம் மிகவும் ஆழ்ந்த விசுவாசமாகும். எனவே தான் இயேசு புனித பேதுரு என்ற பாறையில் தக் திருச்சபையைக் கட்டினார். புனித பவுல் ஆதிதிருச்சபைக்கு வலுயூட்டினார்.

சுயஆய்வு

  1. திருச்சபையில் உண்மையான பற்றுறுதிக் கொண்டுள்ளேனா?
  2. திருச்சபையிலிருச்து விலகிச் செல்லும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு நான் தரும் விளக்கம் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மந்தையை விட்டு விலகிச்செல்லும் ஆடுதளை ஒன்று சேர்க்க எனக்கு வலிமைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு